பாய்ந்துவரும் ரயிலின் முன்பு காதலியை தள்ளிவிட முயன்ற காதலன்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் பாய்ந்து வரும் ரயிலுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தமது காதலியை தூக்கி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகள் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேர்கொண்ட அதிகாரிகள் காதலியை ரயிலுக்கு முன்பு வீச முயன்ற இளைஞரின் பெயர் Lucas Gary Narkle என தெரிவித்துள்ளனர்.

கொலை முயற்சி தொடர்பாக தற்போது கைதாகியுள்ள அவர் புதனன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது Narkle இடம் பேஸ்பால் மட்டை ஒன்று இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அதை அவர் பயன்படுத்தவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி 3 மாத சிறை தண்டனைக்கு பின்னர் பிணையில் அவரை தற்போது விடுதலை செய்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers