கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் தகராறு: மகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்து புதைத்த கொடூரம்!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் ஏற்பட்ட வாய்தகராறின்போது பெற்ற மகனையே கொலை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Perth பகுதியை சேர்ந்தவர் Ernest Albert Fisher(67). இவருக்கு 23 வயதில் Matthew என்ற மகன் இருந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் AFL என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கின் இறுதி போட்டியை பார்க்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அவனது தந்தை Ernest திடீரென இரண்டு கூர்மையான கத்தியை எடுத்து, Matthew-வின் நுரையீரல் மற்றும் பெருங்குடல் பகுதியில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே Matthew உயிரிழந்தான்.

இதனையடுத்து கால்பந்து போட்டி முடிந்ததும்,அவரது மற்றொரு மகன் Joshua Douglas(28) மற்றும் மகள் Hannah Jayde(21) உடன் இணைந்து, வீட்டிற்கு பின் புறத்தில் இருந்த தோட்டத்தில் குழி தோண்டி Matthew உடலை புதைத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், முக்கிய குற்றவாளி Ernest-க்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மகன் Joshua-விற்கு 3 வருடம் 8 மாதம் சிறைத்தண்டனையும், மகள் Hannah-விற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்