அவுஸ்திரேலிய வானில் இருந்து விழுந்த மர்மபொருள்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் விமானங்களின் பயிற்சி வகுப்பின்போது வானில் இருந்து மர்மபொருள் ஒன்று விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆபரேஷன் பிட்ச் பிளாக் விமானங்களின் பயிற்சியில், 16 நாடுகளை சேர்ந்த 140 விமானங்கள் மற்றும் 4000 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தொடங்கிய சில மணிநேரத்தில் ஒரு 'பெரிய பொருள்' வானில் இருந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, பிட்ச் பிளாக் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஒரு ஜெட் விமானம் ஒரு இயந்திர செயலிழப்பு காரணமாக எரிபொருள் டேங்கை அவசரமாக கழற்றிவிட வேண்டி இருந்தது.

பின்னர்தான் விமானம் மற்றும் பைலட் ராயல் அவுஸ்திரேலிய விமானப்படை விமான தளத்திற்கு (RAAF) பாதுகாப்பாக திரும்ப முடிந்தது என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers