2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம்! உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்?

Report Print Kavitha in ஜோதிடம்
3747Shares

வரப்போகிற வருடம் சிலருக்கு அதிர்ஷ்டமான வருடமாக இருக்கும், சிலருக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்கும்.

அந்தவகையில் 2021 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

நீங்கள் தனிப்பட்ட முறையில் அதிர்ஷ்டசாலி. நீங்கள் ஒரு அழகான குடும்பம் மற்றும் உண்மையான நண்பர்களைப் பெறுவீர்கள், ஆனால் உங்கள் தொழில் வாழ்க்கையில், நீங்கள் துரதிர்ஷ்டவசமாக மிகவும் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கிரக மாற்றத்தால் வேலையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக பொருத்தமில்லாத அமைதியைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஒரு ஜென் மனநிலையில்தான் இருப்பார்கள்.

ஆனால் அதன் எல்லையைக் கடந்து விட்டால் இவர்களால் ஒருபோதும் மீண்டும் அந்த அமைதியான நிலையை அடைய முடியாது. இந்த அடையாளம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

இது குறிப்பாக மிதுன ராசிகளுக்கு பல சிக்கல்களை ஈர்க்கும், இது 2021 ஆம் ஆண்டில் மிகவும் துரதிர்ஷ்டவசமான ராசிகளில் ஒன்றாக இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த கோபத்தின் உச்சங்களை அவர்களால் நிர்வகிக்க முடியாது, பின்னர் அவர்களின் தூண்டுதலின் தன்மை காரணமாக பல தவறுகளைச் செய்வார்கள். இந்த ஆண்டு இவர்கள் அனைத்து விதத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம்

நிலையான வலிமை கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு 2021 சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது.

இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அவர்களை பின்தொடராது என்பதால் இவர்கள் வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரிவை சந்திப்பார்கள்.

மேலும் எதிர்பாராத இடத்தில் இருந்து பெரிய துரோகம் இவர்களை பின்னோக்கி இழுக்கப் போகிறது. இது தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கப்போகிறது. தன்மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இவர்கள் சில காரியங்களில் தைரியமாக இறங்குவார்கள்.

ஆனால் அது அவர்களை சிக்கலில்தான் மாட்டவைக்கும். தாங்கள் செய்ததுதான் சரி என்ற இவர்களின் பிடிவாதம் இவர்களுக்கு அளவில்லாத வெறுப்பை பெற்றுத்தரும்.

எனவே இவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை நம்பாமல் இந்த ஆண்டு முயற்சியால் முன்னேற நினைப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை துரதிர்ஷ்டம் ஆதிக்கம் செலுத்தப்போவது அவர்களின் காதல் வாழ்க்கையில்தான்.

சிக்கலான காதல் உறவுகள், நம்பிக்கையின்மை, ஆர்வமின்மை என இவர்கள் படாதபாடு படப்போகிறார்கள்.

காதல் துணையை தேடுபவர்கள் தவறான துணையை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. தவறான உறவில் சிக்கிக்கொண்டோம் என்பதை இவர்கள் அறிந்தாலும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். மிகவும் கவமனாக இருக்க வேண்டிய வருடம் இது.

மீனம்

இவர்கள் பொதுவாக மென்மையானவர்களாகவும், குழப்பங்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

இவர்கள் குழப்பம் அடுத்தடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கப் போகிறது. இந்த ஆண்டில் மீனம் தொடர்ச்சியான தவறுகள், மோசமான முடிவுகள் போன்றவற்றை செய்வார்கள்.

இதனால் பல சந்தர்பங்களில் இவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அதிர்ஷ்டம் பெரும்பாலும் இவர்களின் பக்கத்தில் இருக்காது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்