இன்றைய ராசிப்பலன் (22-07-2019): எந்த ராசிக்கு ராஜயோகம் அடிக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைய தினத்தில் 12 இராசிகளுக்குமான பலன் எவ்வாறு அமையப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

பெரியவர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை.

வழக்குகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பயணங்களின் போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கவனமாக இருங்கள்.

சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெ்ளளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் ஆதரவுகள் பெருகும். திறமைகள் வெளிப்படும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

மிதுனம்

இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். வீட்டு விவாகரங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும்.எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.

அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்

பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது வீண் சண்டைகளைத் தவிர்க்கும்.

விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. பக்கத்து வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி

செயல்களில் இருநு்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

தொழிலுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்

எண்ணிய பணியில் இழுபறியான சூழ்நிலை அமையும். மூத்த உடன்பிறப்புகளால் சுப செய்திகள் உண்டாகும்.

பணியில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனம் தேவை. மற்றவர்களின் பணிகளைக் கூடுதலாக செய்ய நேரிடும்.

கடன் தொல்லைகள் குறைந்து மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் புதுிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த காரியம் நடக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

தந்தையின் ஆதரவால் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும்.

தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான வசதி, வாய்ப்புகள் பெருகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வட கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்து்த பலன்கள் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஆதரவால் பணியை விரைவில் முடிப்பீர்கள்.

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னை குறையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்

திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மனைவி வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.

மீனம்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் குழப்பமான எண்ணங்களால் தெளிவான முடிவெடுக்க காலதாமதமாகும்.

கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.


you may like this...

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்