இன்றைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கு தான் ஜாக்பாட் அடிக்க போகுதாம்!

Report Print Kavitha in ஜோதிடம்
436Shares

இன்று 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்

உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.

பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும். அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள்.

வீடு மற்றும் மனைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மிதுனம்

உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும்.

வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்

தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

அலுவலகத்தில் பிறருடைய வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.

வெளியில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.

சிம்மம்

இதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி

பணிபுரிகின்ற இடங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். சுற்றத்தாரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் பணிவாக நடந்து கொண்டால் அவர்களுடைய ஆதாயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

செய்யும் சுய தொழில் மூலம் உங்களுடைய செல்வாக்கு உயர ஆரம்பிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்கி நிறமும் இருக்கும்.

துலாம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஆதரவு பெருக ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் எண்ணங்கள் அதிகரிக்கும்.

பணியில் உயர் அதிகரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் நீங்கள் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்

வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். வாகன விருத்தி ஏற்படும். மனதில் புதுவித புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

வேலையில் கொஞ்சம் பதட்டமான சூழலே அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு

நீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள்.

வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை. வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

மகரம்

உத்தியோகத்தில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும்.

வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உத்தியுாகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்புார்த்த பலன்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.

கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் வாயிலாக, தொழிலில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்

தொழிலில் வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலமாக ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்