இன்று இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

இன்று எந்த எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்று பாரப்போம்.

மேஷம்

நண்பர்களின் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். போட்டிகளில் ஈடுபடுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.

தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியம் சீராகும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். வேளாண்மைத் துறையில் உண்டாகின்ற தேக்க நிலைகள் நீங்கி, வளம் பெருகும். நட்பு வட்டாரங்கள் பெரிதாகும்.

மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் நீங்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களிடம் பேசுகின்ற போது, நிதானத்துடன் பேசுங்கள். பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்

வீட்டில் கால்நடைகளின் மூலமாக லாபம் உண்டாகும். மனதுக்குள் தோன்றிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.

தாய் வழியிலான உறவினர்களால் பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். செய்கின்ற வேலைகளில் கவனம் கொண்டிருப்பது அவசியம்.

புதிய நபர்களுடைய வருகையினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாளாக அமையும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக உங்களுக்கு சாதகமான செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். விவாதங்களில் ஈடுபடும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கன்னி

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியதால் உங்களுடைய புகழ் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தினால், பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் சுமூகமாக முடியும்.

உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்

செய்கின்ற வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெளியூா் வேலை வாய்ப்புகளில் கொஞ்சம் சிந்தித்து முடிவு செய்வது நல்லது.

தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தன லாபங்கள் பெருகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் அமையும்.

பதவி உயர்வினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ஆக அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

மனதுக்கு இதமளிக்கிற அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய இறைப் பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களினால் அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.

பணிகளில் இருந்து வந்த மந்தத் தன்மை நீங்கும். வாகனங்களில் இருந்து வந்த பழுதுகளைச் சரிசெய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். நண்பர்களின் உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

நீங்கள் மேற்கொள்ளும் இறை வழிபாட்டினால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். பொன்னும் பொருளும் சேர்க்கைகள் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சளாகவும் இருக்கும்.

மகரம்

நீங்கள் எதிர்பார்த்த உதவிகளினால் சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் அமையும்.

வீடு மற்றும் மனைகளால் சுப விரயம் உண்டாகும். கால்நடைகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்

நண்பர்களின் மூலமாக சாதகமான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான சந்திப்புகள் சாதகங்கள் உண்டாகும்.

உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

உங்களுக்கு தூர தேச பயணங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள்.

தந்தைவழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். கடல்வழிப் பயணங்களினால் அனுகூலமான செய்திகள் உண்டாகும்.

மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers