உங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் என்ன சொல்கிறது?

Report Print Kavitha in ஜோதிடம்
2124Shares

ஆப்பிரிக்க ஜோதிடமும் பன்னிரெண்டு வித்தியாசமான குறியீடுகள் உள்ளடக்கியது.

பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்தனர்.

எலும்புகள் தோராயமாக கீழே தூக்கி எறியும்போது அது கோடுகள் மற்றும் அம்புகளை உருவாக்குதல், இந்த வகை கணிப்பானது ஜியோமென்சி என அழைக்கப்படுகிறது. இவ்வாறுதான் ஆப்பிரிக்க ஜோதிடம் உருவானது.

ஜியோமனியில் இருக்கும் பன்னிரெண்டு உருவங்கள் தி பபாப் மரம், தி வெல்த் ஆப் ஆம்பர் அண்ட் சில்வர், தி பேமிலி, ஸ்மால் சர்வீசஸ் டூ தி நெய்பர்ஹூட், தி மார்க்கெட், தி ஆன்செஸ்டர், தி ஜட்ஜ், தி கோலா நட், தி ட்ராவலர்ஸ், தி டிஸ்டன்ஸ். தி சைல்ட் ஆப் தி வெர்ல்டு, தி ஹார்வெஸ்ட் இன் தி க்ரானரி என்பவற்றை அடிப்படையாக கொண்டது.

அந்தவகையில் உங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

ஜனவரி 4 - பிப்ரவரி 3 (தி பபாப் மரம்)

ஆப்பிரிக்க ஜோதிடத்தின் படி இந்த அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் நேர்மையானவராகவும், தாராளமனப்பான்மை உள்ளவராகவும், ஆழமான சிந்தனை உள்ளவராகவும் இருப்பார்கள்.

புத்திக்கூர்மை மிக்க இவர்கள் சிலசமயம் அவர்களின் சொந்த எண்ணங்களால் பதட்டத்திற்கு ஆளாவார்கள். இவர்களின் புத்திசாலித்தனம் இவர்களுக்கு அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பெற்றுத்தரும்.

இவர்கள் எப்பொழுதும் அதிகாரமையமாக இருப்பார்கள். மற்றவர்களின் சதிச்செயல்கள் இவர்களை ஒருபோதும் பாதிக்காது.

பிப்ரவரி 4 - மார்ச் 5 (தி வெல்த் ஆப் ஆம்பர் அண்ட் சில்வர்)

இவர்கள் புத்திசாலிகளாகவும், வசீகரமான தோற்றத்துடன் இருக்கும் இவர்கள் மற்றவர்களால் எளிதில் தூண்டப்படக்கூடியவர்கள்.

இது மட்டுமின்றி இவர்களின் அடிப்படை குணத்தால் அடிக்கடி பழிவாங்கும் எண்ணமும் இவர்களுக்குள் எழும். தனிப்பட்ட நபராக பார்க்கும் போது இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள், எந்த சோதனையையும் வெற்றிகொள்பவராக இருப்பார்கள். மனரீதியாக இவர்கள் மிகவும் கடினமானவர்கள்.

மார்ச் 6 - ஏப்ரல் 4 (தி பேமிலி)

இந்த அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் எப்பொழுதும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுடன் ஒதுங்கித்தான் இருப்பார்கள். இவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டுமே நெருக்கமாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையின் எதாவது ஒரு பகுதியில்தான் வெற்றிகரமாக இருப்பார்கள், ஒன்று தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும்.

இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது இவர்களுக்கு மிகவும் கடினமாகும். ஆனால் ஒரு பகுதியில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஏப்ரல் 5 - மே 4 (ஸ்மால் சர்வீசஸ் டூ தி நெய்பர்ஹூட்)

இந்த அடையாளத்தில் பிறந்தவர்கள் நன்கு பழக்கூடியவர்களாகவும், எளிதில் நண்பர்களை ஏற்படுத்தி கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பிரச்சினை இருக்கும் இடத்திலிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பார்கள்.

அவர்கள் எப்பொழுதும் பிரச்சினைகளை சமாளிக்க முயற்சிக்காமல் அவற்றிடம் இருந்து ஓடத்தான் பார்ப்பார்கள், இதனால் இவர்கள் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக்கொள்வார்கள்.

இந்த அடையாளத்தில் பிறந்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்களிடம் பழகுபவர்கள் உங்கள் முன் நல்லவர்கள் போல நடிக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்.

மே 5 - ஜூன் 4 (தி மார்க்கெட்)

இந்த அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படடுத்துவதுடன் , வாழ்க்கையில் கடினத்தன்மையையும், மிருக குணத்தையும் எதிர்கொள்வார்கள்.

இவர்கள் இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்பவர்கள். ஒரு சமயத்தில் மிகவும் கடினமாக நடந்து கொள்ளும் இவர்கள் ஒரு சமயத்தில் மிகவும் மென்மையாக நடந்து கொள்வார்கள். இயல்பிலேயே இவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவார்கள்.

ஜூன் 5 - ஜூலை 4 (தி ஆன்செஸ்டர்)

இவர்கள் பெரும்பாலும் சுயநலமாக இருப்பார்கள், ஆனால் அது அவர்களுக்கே தெரியாது. இவர்களின் நேர்மறை ஆற்றல்கள் சரியாக வழிநடத்த படாத போது இவர்கள் மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்வார்கள்.

இவர்களின் வேடிக்கையான குணம் எப்பொழுதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளபட வாய்ப்புள்ளது.

இந்த தேதியில் பிறந்தவராக நீங்கள் இருந்தால் மற்றவர்களிடம் மென்மையாக பழக கற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகம் அவ்வளவு மோசமானது அல்ல.

ஜூலை 5 - ஆகஸ்ட் 4 (தி ஜட்ஜ்)

ஆப்பிரிக்க ஜோதிடத்தின் மிகவும் எதார்த்தமான சின்னம் என்றால் அது இதுதான். இவர்கள் வாழ்க்கையை பற்றிய முடிவுகளை எப்பொழுதும் துணிச்சலாக எடுக்கக்கூடியவர்கள், வாழ்க்கையை எதார்த்தமாக எதிர்கொள்ள கூடியவர்கள்.

கடந்த காலத்தை பற்றிய கவலையோ, எதிர்காலத்தை பற்றிய பயமோ எப்பொழுதும் இவர்களிடம் இருக்காது.

ஆகஸ்ட் 5 - செப்டெம்பர் 4 (தி கோலா நட்)

இவர்களிடம் ஆற்றலுக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காது. ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

முக்கியமான முடிவை எடுக்கும் இவர்கள் திடீரென அதை மாற்றி பேசுவார்கள், இப்படிப்பட்டவர்கள் வேலைக்கு ஏற்றவராக எப்போதும் நம்பப்பட மாட்டார்கள், ஆனால் நண்பர்கள் அமைவதில் இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

இவர்களின் அளப்பறியா ஆற்றல் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் இவர்கள் பல சாதனைகள் செய்யலாம்.

செப்டெம்பர் 5 - அக்டோபர் 4 (தி ட்ராவலர்ஸ்)

இவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இவர்கள் எப்பொழுதும் தங்கள் உள்ளுணர்வை மட்டும் கேட்டு நடப்பார்கள், மற்றவர்களின் அறிவுரைகளை காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புவதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வது இவர்க்ளுக்கு மிகவும் கடினமானதாகும். தனியாக இருப்பதே தனது பலம் என்று நினைப்பவர்கள் இவர்கள்.

அக்டோபர் 5 - நவம்பர் 4 (தி டிஸ்டன்ஸ்)

இவர்களுக்கு அதீத தைரியம் இருக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் செயல்களை தங்களின் மனஆசைக்காக பயப்படாமல் செய்யக்கூடியவர்கள்.

இவர்களை சமாளிக்கும் வாழ்க்கைத்துணை அமைவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் நினைத்ததை முடிக்கக்கூடியவர்கள்.

நவம்பர் 5 - டிசம்பர் 4 (தி சைல்ட் ஆப் தி வெர்ல்டு)

இவர்கள் சிலசமயம் கீழ்த்தரமான பொய்களை கூறி மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெரும்பாலும் காய் கொடுக்காது, அதேபோல இவர்கள் வாழ்வில் தவறான நண்பர்களால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

இவர்களின் கடின உழைப்பே இவர்களின் முன்னேற்றத்திற்கான ஏணியாக இருக்கும்.

இவர்கள் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

டிசம்பர் 5 - ஜனவரி 3 (தி ஹார்வெஸ்ட் இன் தி க்ரானரி)

உழைப்பதற்கு 24 மணி நேரமும் தயாராய் இருப்பார்கள், இவர்களின் அடையாளமே அதுதான்.

தங்கள் இலட்சியத்தை அடைய இவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் உழைக்க தயங்கமாட்டார்கள். இவர்கள் வேடிக்கையாக வாழ்வது எப்படி என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்