இன்று இந்த 2 ராசியினர் மட்டும் எச்சரிக்கையாக இருங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க புதுவழிபிறக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்களின் ஆதரவுக் கிடைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

துலாம்

காலை 8மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை,அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள்.தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்க ளுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்

பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர் கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்

காலை 8மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்