இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் அடிக்கப்போகுதாம்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

இன்றைக்கு உங்களுக்கு உங்களுடைய தொழிலிலேயே உங்களைவிடவும் பிரபலமாக இருக்கக்கூடிய நபர் ஒருவரின் நட்பும் பழக்கமும் கிடைக்கும். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.

மனதுக்குள் நிறைந்திருந்த கவலைகள் முற்றிலும் காணாமல் போகும். மனதில் சந்தோஷம் பெருகும். வீட்டில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெற்றோர்களுடன் சுமூகமான உறவைக் கடைபிடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

நிர்வாகத் துறையில் பணிபுரிகின்றவர்கள் அது தொடர்பான முடிவுகளை எடுக்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகளால் மனம் திருப்தி அடைவீர்கள். மனதுக்குள் இதுவரை போட்டுக் குழப்பிக் கெண்டிருந்த விஷயங்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.

உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான முயுற்சிகளை துரிதமாக மேற்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய உறவினர்களின் மூலமாகவே உங்களுடைய தொழிலுக்கும் பெரும் ஆதரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்

குடும்பத்துடன் வெளியூருக்குச் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களின் ஆதரவினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய நெருங்கிய நண்பர்களிடம் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகுளும் மனக்கசப்புகளும் உண்டாகலாம்.

உங்களுடைய தொழில் கூட்டாளிகள் உங்களுடைய எண்ணங்களை அறிந்து நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு எண்ணங்களினால் மனதில் குழப்பமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

மனதுக்கு நெருக்கமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

வீட்டில் குழந்தைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் பணயிக்கிற பொழுது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அரசு சம்பந்தப்பட்ட நீங்கள் வேகமாக முடியும் என்று நினைத்திருந்த காரியங்கள் நிறைவடைய கொஞ்சம் கால தாமதமாகும்.

வேலை செய்யுமிடத்தில் உங்களுடன் பணிபுரிகின்றவர்கள்உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். நீங்களும் அதேபோல் நடப்பது நல்லது. வீட்டில் பிள்ளைகளின் ஆலோசனைகளைக் கேட்டு தேவையானதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். புதிய செயல் திட்டங்களைத் தீட்டி, அதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வீர்கள்.

விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

தொழில் மேம்பாட்டுக்காக நண்பர்களுடைய உதவிகளைப் பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். அறிவு பெருகும். ஞானம் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீங்களே எதிர்பாராத வியாபாரங்கள் உண்டாகும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

பதவி உயர்வுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது கூட்டங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கு ஆதரவுகள் பெருகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட இலக்குகளினுடைய முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மகரம்

நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களால் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நேர்மையானவராக இருந்தீா்கள் என்றால் உங்களுடைய மதிப்புகள் உயரும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருக்கும் னவலைகள் தீரும். நில விருத்திகள் உண்டாகும்.

தொழில் மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களால் மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடியினால் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

மீனம்

மனதில் துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். மனைவியின் உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

நிர்வாகத்தில் உள்ள குறைகளைக் களைவீர்கள். கால்நடைகள் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers