இந்த ராசிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்பவருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

Report Print Kabilan in ஜோதிடம்

சில ராசிகளில் பிறந்தவர்களை மணப்பதன் மூலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் அமையும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசி பெண்கள் தங்கள் கணவரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற விரும்புவார்கள். இவர்களின் கணவரையே பெரும் துணையாக கருதுவார்கள். இந்த ராசிப்பெண்கள் மிகுந்த ஆற்றல் உடையவர்கள், எந்த சூழ்நிலையிலும் கணவரை நிராகரிக்கமாட்டார்கள்.

கணவரின் குடும்பம், அவர்களின் கடமையையும் ஒருபோதும் இந்த ராசிப்பெண்கள் தவிர்க்க மாட்டார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சோர்வடையமாட்டார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமல்ல, உறுதியான நம்பிக்கை கொண்டவர்களும் கூட. எனவே இவர்கள் குடும்பத்தை முன்னேற்ற முயற்சிப்பார்கள்.

கடகம்

கடக ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை இருக்கும். அதற்கு காரணம் இந்த ராசி பெண்ணின் மென்மையான குணமும், நம்பிக்கைதன்மையும் தான். இந்த ராசிப்பெண்கள் பலவீனமாக இருக்கும்போது, தனக்கு பலமான ஒரு துணை வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனது மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டால், அதற்கு உதவியாய் இருந்தவர்களை எப்போது விட்டுக்கொடுக்காமல் இருப்பார்கள். இந்த ராசிப்பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடைசிவரை தனது அன்பையும், ஆறுதலையும் கொடுப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிப்பெண்கள் நேர்மையும், நம்பிக்கையும் மிகுந்தவர்கள் ஆவர். இவர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தை சரியாக திட்டமிடக்கூடியவர்கள். கணவருக்கு சிறந்த துணையாக இருப்பார்கள். தங்களது கணவரின் குறிக்கோளை தீர்மானிப்பதிலும், அதனை அடைவதற்கும் இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

இவர்களின் தேர்வுகள் மற்றும் விருப்பங்கள் எப்போதும் சிறப்பாக இருப்பதுடன், இவர்கள் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள்.

விருச்சிகம்

இந்த ராசிக்கார பெண்கள் அமைதியாக இருக்காவிடிலும், தங்களை பாராட்டும் ஆண்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்களின் கணவரின் வாழ்க்கை எப்போதும் உற்சாகமாக இருக்கும்.

இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு உள்நோக்கம் இருக்கும். ஆனால், இவர்களது வெளிப்படையான குணம் மற்றவர்களை விரும்ப வைக்கும்.

கன்னி

கடுமையான வெளித்தோற்றத்தைக் கொண்டிருக்கும் கன்னி ராசிப்பெண்கள், தங்களது துணைக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். சுயநலம் இல்லாதவர்களான இவர்கள், பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கணவர் செய்யக்கூடிய அனைத்திலும் இவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அத்துடன் துணையின் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாக இருக்க இவர்கள் உதவுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்