இன்று எந்த 2 ராசிக்காரர்களுக்கு மட்டும் யோகம் அடிக்க போகுது தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அவர்களுக்கு யோகம் கிடைக்கும்.

மேஷம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

ரிஷபம்

இன்று உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேலும் சுக்ரன் இருப்பதால் இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.வீட்டில் சில சந்தோஷமான விஷயங்கள் நிகழும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

கடகம்

இன்று உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிச மாக உயரும்.

கன்னி

இன்று உங்களக்கு முதிர்ச்சி தெரியும். சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.

துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.

தனுசு

உங்களுக்கு குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

மகரம்

நீங்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.

கும்பம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங் களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் செழிக்கும்.

மீனம்

இன்று நீங்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்