மற்றவர்களை கவர்ந்திழுக்கும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும் அற்புதமான குணங்கள் என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட விரும்ப மாட்டார்கள்.இவர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை, எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் வாழ்வில் தாங்கள் விரும்பும் விஷயங்களில் கவனத்தை செலுத்தும் படி ஊக்குவிப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை செய்து முடிக்க களத்தில் இறங்கி விட்டால், அதை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பொறுப்பில் ஒருவர் வந்துவிட்டால், அவர்களை எப்படி மிகவும் சௌகரியமாக வைத்துக் கொள்வது என்பதை நன்கு அறிந்தவர்கள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களின் தாராள மனம் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அப்போது மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அமைதியாக பதிலளிப்பார்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் எதையும் துணிச்சலாக செய்யக் கூடியவர்கள். இவர்கள் தங்கள் மீது போதுமான நம்பிக்கைக் கொண்டவர்கள். ஒருவேளை தாங்கள் விரும்பியதை அவர்களால் அடைய முடியாவிட்டால், அதை அடைவதற்கு எந்த அளவு வேண்டுமானாலும் போவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எதையும் அன்புடன் கற்றுக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் நம் வாழ்க்கையை வளப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொள்ளவும் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்துடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் நியாயமான மனநிலையால் மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் பாலின தோற்றத்தினால் மற்றவர்களை ஈர்ப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, தங்கள் தோற்றத்தையே சிறப்பாக நினைத்து மகிழ்வர்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும், அதை அச்சம் கொண்டு கைவிடாமல் செய்து முடிப்பார்கள்.இவர்களிடம் இருக்கும் இந்த தைரியமான துணிச்சலே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் குணமாகும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். இந்த ராசிக்காரர்களிடம் உள்ள பொறுப்பு குணம் தான், மற்ற ராசிக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. இவர்களின் பொறுப்பும், நம்பகத்தன்மையும் தான், மற்றவர்களை ஈர்க்கும் குணமாகும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலிகள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கற்பனைவளம் மிக்கவர்கள் மற்றும் படைப்பாளர்கள். இந்த குணத்தால் தான் மற்றவர்களை ஈர்ப்பார்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் தன்னலமற்றவர்கள். இவர்கள் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அவர்களை மன்னித்து விடுவார்கள் இவர்களின் தன்னலமற்ற மற்றும் மன்னிக்கும் குணமே மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்