உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்

Report Print Jayapradha in ஜோதிடம்

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த தொழிலை பற்றி முழு விவரம் தெரிந்து பின் அதனை அந்த செயலை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொழிலை செய்து வந்தால் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் இலட்சியத்தில் உறுதியாகவும் மற்றும் மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். மேலும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையை தேர்ந்து எடுத்தால் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனப்பான்மையும் மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நினைப்பார்கள். இவர்கள் பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிகாரர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து செய்ய கூடிய வேளையில் அதிக விருப்பம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இயற்கையை சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். இவர்கள் கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மையும் மற்றும் தனி ஒருவராக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். இவர்கள் முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் சிறந்து செயல்படுவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் செய்யும் வேளையை நிறைவாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் சிறந்து காணப்படுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்கள் எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள்.இவர்கள் மக்கள் தொடர்பு, திரைப்படம், தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.

கும்பம்

கும்பம் ராசிகாரர்கள் எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதிலும் மற்றும் ஒரே வேலையை செய்யவும் விரும்பமாட்டார்கள்.இவர்கள் கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

மீனம்

மீனம் ராசிகாரர்கல் கற்பனை மற்றும் படைப்பு திறன் அதிகம் கொண்டவர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers