குருவின் பார்வையால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய மீன ராசி அன்பர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். மேலும் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு செல்கிறார்.

மேலும் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் ராசியையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்
தொழிலும் வியாபராமும்

பொதுவாக தொழிலில் வளர்ச்சியும், அயல் நாட்டு பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இக் காலகட்டத்தில் வருமானம் உயரும். சார்நிலை அலுவலரின் ஒத்துழைப்பினால் வேலையினை குறித்த காலத்தில் முடிக்க முடியும்.

பொருளாதாரம்

பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எதிர்காலத்தை உத்தேசித்து சிறு சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும். அனாவசிய செலவுகள் தவிர்க்கப்படும்.

குடும்பம்

குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அனுசரணையைப் பெற முடியும். பாசிடிவான எண்ணங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு கை கொடுக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

கல்வி

மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும்ஆசிரியர் விரிவுரையாளருடன் நல்லுறவு உண்டு. எல்லாப் பணிகளுமே சுலபமாக முடியும். பொது அறிவு விருத்தி ஆகும்.

காதலும் திருமணமும்

சிறு சிறு உரசல்கள் இருந்தாலும் அவைகளை களைந்து உறவுகளை வலுப்படுத்த முடியும். விட்டுக் கொடுக்கும் மனோபாவம் உண்டாகும். திருமணம் குறித்து தெளிவாக இருந்தால் இக்காலகட்டத்தை பயன்படுத்தி திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியம்

இக்காலக் கட்டத்தில் ஆரோக்கியம் பேண முடியும். எனினும் அஜீரணக் கோளாறுகளை தவிர்க்க, உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். நிறைய பழம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்

வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும். ஓம் பிரகஸ்பதியே நமஹ என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கவும்.

சில முக்கியமான கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்