குரு பெயர்ச்சி பலன்கள் 2018: ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

தாய் தந்தையரை போற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

உங்களது ராசிக்கு குரு பகவான் 5ஆம் இடம் 7 ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார்.

மேலும் 5 ஆம் இடம் புத்திர ஸ்தான பாக்கியத்தையும் 7 ஆம் இடம் திருமண உறவுகளையும் 9 ஆம். இடம் சகல பாக்கியங்களையும் குறிக்கும்.

விருச்சிக ராசிகர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
 • குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.
 • பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.
 • தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள்.
 • பெண்களுக்கு பயணம் பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
 • மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும்.
 • அரசியல் துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும். உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களை புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.
 • கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.
 • ஏற்கனவே பணியிலிருந்து வருபவர்களுக்கு இது நாள் வரை மறுக்கப்பட்டு வந்த உயர்பதவியொன்று இப்போது கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் வழக்கம் போல் நடந்து வரும்.
 • அலுவலகம் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்தாததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
 • இந்த குரு பெயர்ச்சியில் உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள்.திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும்.
பரிகாரம்
 • கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள் அல்லது ஓம் பிரகஸ்பதியே நமஹ என்று 108 முறை ஜெபிக்கவும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers