வாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகள் எந்த திசைகளில் இருக்க வேண்டும் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

தாவரங்களின் தோற்றம் மற்றும் குணங்களுக்கு ஏற்ற வகையில் அதன் இருப்பிடம் அமைய வேண்டும்.

வாஸ்து என்பது ஒரு அறிவியல் என்பதால் ஒவ்வொரு வழிகாட்டுதலுக்கும் ஒரு அறிவியல் விளக்கமும் இருக்கும்.

வாஸ்துவின் படி வீட்டில் இருக்க வேண்டிய சிறப்பான மரங்கள் பற்றியும் அவற்றை வீட்டில் வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்

துளசி

புனித துளசி என்று அழைக்கப்படும் ஒரு நறுமணம் வற்றாத தாவரமாகும். லமியாசியா என்னும் குடும்பத்தை சேர்த்தது துளசி செடி. வீட்டின் வளங்கள் கொழிக்க புனித துளைசியை வளர்ப்பது நல்லது.

வீட்டின் வடக்கு, வடகிழக்கு, அல்லது கிழக்கு பகுதியில் துளசியை வளர்க்கலாம். அல்லது வீட்டின் முன்புறம் வளர்க்கலாம். மேலும் துளசி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது எனவே தினமும் இதனை வழிபடுவது நல்லது.

வேப்ப மரம்

வேப்ப மரம் பல்வேறு மருத்துவ தன்மைகள் கொண்டது. இதன் சாறு சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. வேப்ப இலை கசப்பு தன்மை உடையது.வேம்பு என்று அழைக்கப்படும் இதனை வீட்டின் பின்புறம் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

அதாவது ஒருவர் வாழ்வில், இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு போன்ற தன்மைகள் கொண்ட அனுபவங்கள் மாறி மாறி வரும் என்பதன் குறியீடாக இது பின்பற்றப்பட்டு வருகிறது.

மாமரம்

மாமரத்தின் பெரும்பாலான பகுதிகள் மருத்துவ நன்மைகளைக் கொண்டவை.மாமரத்தின் கட்டைகளைப் பயன்படுத்தி இறந்தவரை தகனம் செய்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது

மாமரத்திகு நீடித்த ஆயுள் உள்ளது. 400-500 ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட ஒரு மரம் இந்த மாமரம். அதனால் இந்த மரம் நிச்சயம் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கலாம்.

பலா மரம்

மாமரத்தைப் போலவே, பலா மரமும், சுவையான பழத்தைத் தரக் கூடிய ஒரு மரமாகும். ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் பலா மரங்களில் பலாப் பழம் மிக அதிக அளவில் காய்க்கும்.

இதன் இலைகள் இகவும் புனிதமாக கருத்தப்பட்டு பூஜை பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இந்த பலா மரத்தையும் உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்.

வாழை மரம்

இளம் வாழைக் கன்றுகளை வீட்டின் கதவு மற்றும் பந்தல்களில் விழாக்களின்போதும் பண்டிகைகளின் போதும் அலங்காரப் பொருளாக பயன்படுத்தலாம். இது செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக போற்றப்படுகிறது.

வாழை மரத்தின் வேர், தண்டு, பூ, மற்றும் இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் சாறு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக உள்ளது. ஆகவே இந்த மரத்தை உங்கள் தோட்டத்தில் நிச்சயம் வளர்க்க வேண்டும்.

தென்னை மரம்

தென்னை மரத்தின் இளநீர், மிகவும் ஆரோக்கியமான குளிர்ச்சி அளிக்கும் குறைந்த கொழுப்பு பானமாகும். தேங்காயின் சதை பகுதியை தென்னிந்திய சமையலில் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளைத் தயாரிப்பார்கள்.

இதன் பயன்பாடு காரணமாக இதனை ஒரு புனிதமான மரமாக கருதுகின்றனர். அதனால் இந்த மரத்தை உங்கள் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்க்கலாம்.

பூந்தொட்டிகள்

பூந்தொட்டிகளை மதில் சுவற்றின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. அப்படி வைப்பதால், காலையில் வரும் சூரிய ஒளி தடைபடும்.

ஆனால் தரையில் இந்த திசையில் இந்த பூந்தொட்டிகளை வளர்க்கலாம். ஆனால் அதன் உயரம் மூன்று அடிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

படரும் கொடிகள்

பலவீனமான தண்டுகள் கொண்ட செடிகளை நாம் கொடிகள் என்று கூறுவோம். இவை படர்ந்து வளர்வதற்கு குச்சி அல்லது கொம்பு போன்ற ஆதாரங்கள் தேவைப்படும்.

இந்த கொடிகள் வீட்டின் மதில் சுவர் அல்லது கட்டிடத்தின் மீது படர்வதால், சில காலங்களில் கட்டிடத்தின் சுவர்களில் சிறு விரிசல் உண்டாகலாம். எனவே இவை மரத்தின் துணையுடன் அதனை வீட்டின் வெளியில் வளர்க்கக் கூடாது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்