குருபெயர்ச்சி 2018 - 2019: மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

அன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 1௦ ஆம் இடம் 12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1௦ ஆம் இடம் தொழிலையும் 12 ஆம் இடம் விரயம் மற்றும் அயல் நாட்டு பயணத்தையும் 2 ஆம் இடம் பண வரவு மற்றும் குடும்பத்தையும் குறிக்கும்.

இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.

தொழிலும் வியாபாரமும்

வேலைகள் குவியும். அதனால் வேலைகளை ஒப்புக் கொள்ளும் போதே நிதானமாக பார்த்து ஒப்புக் கொள்ளவும். உங்கள் வேலைக்கு அங்கீகாரம் உண்டு. ஆனால் அது மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே நிகழும். வேலை நிமித்தமாக அயல் நாட்டு பயணங்களும் தெரிகின்றது.

வியாபார முன்னேற்றத்திற்கு மிகுந்த பிரயத்தனங்கள் தேவைப்படும். அதிக வேலைப் பளுவால் செய்யும் பணியில் பரிமளிக்க முடியாமல் போகலாம் எனவே ஒப்புக் கொண்ட பணியை குறிப்பிட காலத்திற்குள் முடித்துக் கொடுப்பது நல்லது.

பொருளாதாரம்

அனாவசிய செலவுகள் காணப்படுகின்றது. அதே நேரத்தில் கடன்களை திரும்ப செலுத்த இந்த காலக் கட்டம் கை கொடுக்கும். நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி பெற வாய்ப்பு உண்டு. பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் காண்பது சற்று சிரமம்.

குடும்பம்

குடும்ப உறவுகளை சுமாராக பராமரிக்க முடியும். உறவுகளில் விரிசல்கள் காணப்படுகின்றது. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. குடும்ப பொறுப்புகளை ஏற்க தாங்கள் தயங்கக் கூடும். இதனால் சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையினை தவிர்க்கவும்.

கல்வி

கல்வியில் வெற்றி காண அதிக பிரயத்தனம் தேவைப்படும். வீண் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறை சாத்தியங்களைப் பார்த்து படிப்பில் திட்டங்களை வகுப்பது நல்லது. மறைந்திருந்த திறமைகள் வெளிப் படக் கூடிய காலமிது. வீண் பிடிவாதங்களை தவிர்த்தாலே நல்ல பலன்களைப் பெற முடியும்.

காதலும் திருமணமும்

காதல் உறவுகள் ரம்மியமாக இல்லை. சொன்னது ஒன்று புரிந்து கொண்டது ஒன்று என்ற விதமாக உறவுகள் அமையும். வீண் குழப்பங்கள் காணப்படுகின்றது. நல்ல புரிதலுக்கு மிகுந்த பொறுமை தேவை. திருமண வாய்ப்புகள் தாமதப்படலாம். திருமண உறவுகளை தீர்மானிப்பதில் தாமதப் போக்கு தெரிகின்றது.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. உடலில் சிறு உபாதைகள் இருந்தால் கூட அதனை அலட்சியப் படுத்த வேண்டாம். உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்

கூடுதல் வேலைப் பளு

நிதி உதவி பெறுதல்

குடும்ப உறவில் மனப்பிணக்கு

வெற்றிக்கு அதிகப் பிரயத்தனங்கள்

திருமண ஏற்பாடுகள் தாமதமாகுதல்

உடல் உபாதைகள்

முன்னெச்சரிக்கை

நடைமுறை சாத்தியங்களை பார்த்து பொறுப்புகளை எற்றுக் கொள்ளவும்

பெரிய அளவிலான கடன்களை தவிர்க்கவும்

உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும்

குடும்ப உறவில் கூடுதலாக பொறுப்பு எடுத்துக் கொள்ளவும்

பரிகாரம்

முடிந்தால் வியாழக்கிழமைகளில் ஒரு பொழுது உணவை கடைபிடிக்கலாம். குரு பகவானுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையேனும் ஹோமம் செய்யவும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்