உங்கள் ராசிக்கு பொருத்தமான காதல் ராசி எது ?

Report Print Kavitha in ஜோதிடம்

உங்கள் ராசிக்கு பொருத்தமான ராசி ஜோடி யார் என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

துலாம் மற்றும் விருச்சிகம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஆர்வத்துடன் செயல்படும் நபர்கள். எனவே இவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி கொள்ள எளிமையாகிறது. துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துணையை அளவு கடந்து விரும்புபவர்கள். அதே நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை சுற்றியுள்ள மக்களை விரும்புபவர்கள். எனவே இந்த இரண்டு ராசிகளுக்கும் இடையே ஒரு நெருக்கமான மனநிலை நிலவுகிறது.

இந்த இரண்டு ராசிகளுக்கிடையே தனிப்பட்ட குணநலன்களும், அடையாளங்களும் காணப்பட்டாலும் இவர்கள் நட்புடன் செயல்படும் வல்லமை படைத்தவர்கள். இவர்கள் இணைவதற்கு எந்த ஒரு சக்தியும் தேவையில்லை. இவர்களின் கெமிஸ்ட்ரி இணையற்றது. மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இவர்களின் உறவு நீடிக்கும்.

மீனம் மற்றும் கடகம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே உள்ளுணர்வு நன்கு செயல்படும். இதனால் ஒருவருக்கொருவருக்கான அணுகுமுறை நல்லவிதமாக அமையும். மற்ற ராசிக்காரர்களை விட இந்த இரண்டு ராசிக்காரர்கள் மிகச் சிறந்த ஜோடி எனலாம்.

இருவருக்கிடையே ஏற்படும் அழுத்தத்தை குறைத்து தங்களுக்கு சாதமாக பயன்படுத்து கொள்வது நல்லது. இவர்கள் இருவரும் கடலில் இருக்கும் தண்ணீர் மற்றும் கடற்பாசி போன்ற வர்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது என்பது சிரமம்.

தனுசு மற்றும் மேஷம்

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க முடியாது. இவர்களின் அரு சிந்தனைகளும் ஒரு டெலிபதி மாதிரி செயல்படும். இவர்கள் இருவரும் இணைந்தால் போதும் அங்கே மூன்றாவது நபருக்கு இடமில்லை. அது அவர்களுக்கென்றே தனி உலகமாக அமையும்.

இந்த இரண்டு நபர்களும் ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசக் கூடியவர்கள். விடுமுறை கொண்டாட்டங்கள், பயணங்கள் என்று இவர்களின் பேச்சு நீண்டு கொண்டே இருக்கும். ஒரு தடவை நண்பர்களாக பழகி விட்டார்கள் என்றால் சாகும் வரை இவர்களின் நட்பு தொடரும்.

மிதுனம் மற்றும் கும்பம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒட்டிக் கொள்ளும் ஈர்க்கும் காந்தங்கள் போன்ற வர்கள். மிதுனம் தனி நபராக செயல்படக் கூடியவர்களாக இருப்பதாலும் கும்பம் உறுதியான ஒற்றுமை பண்புடன் இருப்பதாலும் இருவரும் இணையும் போது அவர்களின் வாழ்க்கை சமநிலையாகிறது. அவர்கள் தங்களின் நோக்கங்களை எப்படி நிறைவேற்றலாம் என்ற தவிப்பை கொண்டு இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாளித்து செல்கிறார்கள்.

கன்னி மற்றும் ரிஷபம்

இந்த இரண்டு ராசிகளும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ராசிகள் என்றே கூறலாம். இவர்களின் உறவு ஒரு ஆழமான தம்பதியினர் என்ற பெருமையை பெற்று தரும். ஒருவருக்கொருவர் உணர்வுகளை கிரகித்து அதன்படி செயல்படுவார்கள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கும் இடையே ஒரு எல்லையில்லாத ஈர்ப்பு சக்தி இருக்கும். இதனால் ஒருவருக்கொருவர் எப்பொழுதும் கவர்ந்திழுக்கும் சக்தியுடன் பாராட்டுடன் வாழ்வார்கள்.

துலாம் மற்றும் கடகம்

இந்த இரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கை புதிர் போன்றது. புதிரை ஒருவருக்கொருவர் அவிழ்க்க முற்படுவார்கள். எப்பொழுதும் ஒன்றாக இருப்பதையே விரும்புவார்கள். தனித்தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் இருவரும் எப்பொழுதும் சூழ்ந்து செயல்படுபவர்கள். ஒரு விதைப்பையினுள் இருக்கும் பிணைந்த இரண்டு விதைகள் போன்று வாழ்வார்கள்.

இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விட்டால் போதும் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் திருமண வாழ்வில் உடனடியாக அடியெடுத்து வைக்கலாம். இந்த உடனடி திருமணம் இருவருக்கும் ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தி சீக்கிரமே வாழ்க்கையை வளமாக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்