இந்த மூன்று ராசிக்காரர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்!

Report Print Kabilan in ஜோதிடம்
3412Shares
3412Shares
ibctamil.com

மேஷம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் அரிதானவர்கள், அதிர்ஷ்டசாலிகள் ஆவர். அவற்றுக்கான காரணங்களை இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அரிதானவர்கள். குறிப்பாக, மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரையில் பிறந்த நபர்களே இவ்வாறு இருப்பார்கள்.

உறவுகளின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் இவர்கள், தங்களை தாங்களே நேசிக்கும் மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் நேசிக்கும் விடயங்களை, அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். மேஷ ராசிக்காரர்கள், வாழ்க்கையில் எப்போது என்ன முடிவு எடுப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது.

மேலும், பிறர் தன் மீது தங்களது கருத்துக்களை திணிப்பதை இவர்கள் ஏற்கவோ, விரும்பவோ மாட்டார்கள். இதனாலேயே இவர்கள் அரிதானவர்களாக உள்ளனர்.

தன் மனதில் உள்ள உறுதியான கருத்துக்களை எடுத்துக் கூறும் இவர்கள், துணிச்சலும், ஆர்வமும், அதிகாரமும் மிகுந்தவர்களாக இருப்பர். ஆனால், சவால்களை சமாளிக்கும் வகையில் மட்டும் இவர்கள் சற்று பலவீனமானவர்களாக இருப்பர்.

தனுசு

நவம்பர் 22 முதல் டிசம்பர் 21 வரையில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள், மிகவும் கூரிய அறிவுத் திறன் படைத்தவர்கள். ஆனால், சமீபத்தில் இந்த ராசியில் பிறப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

தங்களது அதீத சக்தியினால் பணம் மற்றும் ஆண்களை கவரும் தனுசு ராசிக்காரர்கள், உலகத்தை நன்றாக புரிந்தவர்களாக இருப்பார்கள்.

எந்த சூழ்நிலையிலும் எவருக்கும் துரோகம் நினைக்காத, நல்ல உள்ளம் கொண்ட இவர்கள், பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அறியும் திறன், சுயநலம் பாராமல் பிறருக்கு உதவுவது, சுறுசுறுப்புடன் எடுத்த காரியங்களை செய்து முடிப்பது ஆகிய காரணங்களால் இவர்களும் அரிதானவர்கள் ஆவர்.

இவர்களுக்கு பொய் பேசுபவர்கள், தீய பழக்கம் உள்ளவர்கள் ஆகியோரை பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் எவரும் நிற்க முடியாது. எனினும், தற்பெருமை பேசுவது மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும்.

கும்பம்

ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையில் பிறந்த கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அரிதானவர்கள் ஆவர். ஏனெனில், இவர்களுக்கு பிறப்பில் இருந்தே விசுவாசம் என்பது இருக்கும்.

உறவுகளை அதிகமாக மதிக்கும் இவர்கள், மற்றவர்களிடமும் விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். எனினும், இவர்களிடம் சுயநலம் என்பது இருக்காது. அன்பும், அமைதிய சேர்ந்த தோற்றமுடைய இவர்கள், நியாயமான விடயங்களையும், அநியாயமான விடயங்களையும் பயமின்றி கூறுவர்.

மனதைக் கட்டுப்படுத்தும் பக்குவம் கொண்ட இவர்கள், தனக்கு பிடிக்காதவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை ஏற்க மாட்டார்கள்.

மேலும், கும்ப ராசிக்காரர்கள் பிடிவாதம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்