தாய்லாந்தில் பிரித்தானியா ஜோடிக்கு நேர்ந்த கதி.. மனைவி கண்முன்னே துடி துடிக்க கொல்லப்பட்ட கணவர்

Report Print Basu in ஆசியா

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர், அவரின் மனைவி கண் முன்னே துடி துடிக்க கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான அமித்பால் சிங் பஜாஜ் தனது மனைவி குழந்தையுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு Phuket பகுதியல் உள்ள ஹொட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் பக்கத்து அறையில் இருந்த நபர்கள் பாட்டு படி கத்தி கும்மாளம் அடித்துள்ளனர்.

இதனால், கடுப்பான பஜாஜ் ஹொட்டலின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவல் அளிக்க அவர்கள் பஜாஜின் பக்கத்து அறையில் தங்கியிருந்த நார்வேயை சேர்ந்த 53 வயதான ரோஜர் புல்மேனை அமைதியாக இருக்கும் படி இரண்டு முறை அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சத்தம் அதிகமாக மிகவும் கடுப்பான பஜாஜ் ஸ்டீக் கத்தி எடுத்துச்சென்று, புல்மேனை எச்சரித்துள்ளார். மதுபோதையில் இருந்து புல்மேன் தொடர்ந்து பாட்டு படி கத்தியுள்ளார்.

இதனையடுத்து, பஜாஜ், புல்மேன் மோதிக்கொண்டுள்ளனர். இதன்போது, பஜாஜ் முதலில் புல்மேனின் தோள்பட்டையில் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து, புல்மேன் பஜாஜின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மூச்சு திணறிய பஜாஜ் மனைவி கண் முன்னே துடி துடிக்க உயிரிழந்துள்ளார்.

புல்மேனை கைது செய்த தாய்லாந்து பொலிசார் கரோன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வேண்டுமென்றே அவரைக் கொல்ல முயற்சிக்கவில்லை என்று புல்மேன் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பிணையில் புல்மேன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு முடியும் வரை அவர் தாய்லாந்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும். பஜாஜ் இறந்தது குறித்து பிரித்தானியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்