10 நாட்கள்... நடுகாட்டில் அனுபவித்த கொடுமைகள்..! பிரித்தானியா சிறுமியின் உடல் கூராய்வு அறிக்கை வெளியானது

Report Print Basu in ஆசியா

மலேசியாவில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானியா சிறுமியின் உடல் கூராய்வு அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய தலைநகரிலிருந்து தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செரெம்பனில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருந்து காணாமல் போன கற்றல் சிரமங்களால் பாதிக்கப்பட்ட 15 வயதான நோரா, 10 நாட்களுக்குப் பிறகு பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

நோராவின் உடலை அருகில் இருந்து காட்டு ஓடையிலிருந்து மலேசிய அதிகாரிகள் கண்டெடுத்தனர், இதனையடுத்து, அவர் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அறிய நோராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தற்போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர், அதில், காணாமல் போன நோரா நீண்டகால பசி மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவரது உடலுக்குள் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்ததாக கூறினர்.

மேலும், பிரேத பரிசோதனையில் அவரின் குடல் பாதிப்புக்குள்ளானதாகக் காட்டியதாகவும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர். நோரா கடத்தப்பட்டதாக தற்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்