காஷ்மீர் விவகாரம்; இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான்.. லக்ஷர் ஈ தொய்பா தலைவர் விடுவிப்பு

Report Print Basu in ஆசியா

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த யூலை 17-ம் தேதி கைது செய்யப்பட்டு கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான முடிவை இந்தியா அறிவித்த சில நாட்களில் பாகிஸ்தானால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன.

அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து வருகிறார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்