விஸ்வரூபம் எடுக்கும் காஷ்மீர்..! இந்தியாவுக்கு எதிராக சபதமிட்ட பாகிஸ்தான் ராணுவம்

Report Print Basu in ஆசியா

காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீரிகளுக்கு பக்க பலமாக பாகிஸ்தான் ராணுவம் நிற்கும் என அந்நாட்டு ராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உறுதியளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பொதுவெளியில் தெரிவித்துவிட்டு காஷ்மீரில், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிராந்தியம் முழுவதும் ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 வதை நீக்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கூறியதாவது, காஷ்மீரிகளின் இறுதி போராட்டத்தில் பிராந்திய மக்களுக்கு பக்க பலமாக இறுதிவரை பாகிஸ்தான் ராணுவம் நிற்கும். நாங்கள் தயராக இருக்கின்றோம் மற்றும் இது சம்பந்தமாக எங்கள் கடமைகளை நிறைவேற்ற எந்த அளவிற்கும் செல்வோம் என சபதமிட்டுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers