காஷ்மீர் பிரிவினை..! ஒரே பதிவில் பல தவறான கருத்துகள் கூறி சிக்கிய இலங்கை பிரதமர்

Report Print Basu in ஆசியா

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ட்விட்டரில் கூறியதாவது, லடாக் ஒரு இந்திய மாநிலமாக மாறும். லடாக்கின் மக்கள் தொகையில் 70 சதவீத பௌத்த மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால், பௌத்தர்கள் பெரும்பான்மையைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக இருக்கும்.

லடாக் உருவாக்கம் மற்றும் அதன் விளைவாக மறுசீரமைப்பு என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், லடாக் விஜயம் செய்ய நன்கு மதிப்புள்ள ஒரு அழகான பகுதி என ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமரின் பதிவில் பல தவறுகளை குறிப்பிட்ட நெட்டிசன்கள், லடாக் ஒரு மாநிலாமாக இருப்பதற்கு மாறாக, சட்டமன்றம் இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருக்கும்.

லடாக்கின் லே மாவட்டத்தில் பெரும்பான்மையான பௌத்தர்கள் மற்றும் கார்கில் மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் என ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. லடாக் யூனியம் பிரதேசத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான பௌத்த மதத்தினர் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இந்தியாவில் ஏற்கனவே பௌத்தர்கள் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக சிக்கிம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்