மலேசியாவில் பிரித்தானியா இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை: பொலிஸ் சந்தேகத்தால் மனமுடைந்த பெற்றோர்

Report Print Basu in ஆசியா

மலேசியாவில் பிரித்தானியா இளம்பெண் காணாமல் போன விவகாரம் இப்போது கடத்தலாக கருதப்படுவதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியைக் கேட்டு காணாமல் போன நோரா என்ற இளம்பெண்ணின் பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர். சிறப்புத் தேவைகளைக் கொண்ட 15 வயது நோரா, லண்டனில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்த ஐரிஷ்-பிரெஞ்சு தம்பதியினரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தெற்கே 39 மைல் தொலைவில் உள்ள செரம்பனுக்கு அருகிலுள்ள டுசன் ரிசார்ட்டில் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு வந்தபோது நோரா காணாமல் போனார்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தனது படுக்கையறையில் இருந்து நோரா காணாமல் போனதைக் கண்டுபிடித்த தந்தை எச்சரிக்கை எழுப்பியதாக, நோராவின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வரும் லூசி பிளாக்மேன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நோராவின் அத்தை ஐஸ்லிங் அக்னியூ கூறியதாவது: நோராவின் பெற்றோர் மற்றும் அயர்லாந்து மற்றும் பிரான்சில் உள்ள உறவினர்கள் அவர் காணாமல் போனதால் மனமுடைந்துள்ளனர். நோரா சிறப்புத் தேவைகளைக் கொண்ட ஒரு குழந்தை, கற்றல் மற்றும் மேம்பாட்டு குறைபாடுகள் கொண்டவர், இது அவளை குறிப்பாக பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் அவரது பாதுகாப்பிற்காக நாங்கள் அஞ்சுகிறோம்.

நோராவுக்கு உதவி பெறுவது எப்படி என்று தெரியாது, ஒருபோதும் தன் குடும்பத்தை தானாக விட்டு செல்லமாட்டார் என தெரிவித்துள்ளார். நோராவை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் மலேசியா அரசிற்கு, பிரான்ஸ் மற்றும் ஐயர்லாந்து அரசாங்கமும் உதவி வருகின்றன.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்