சீனாவில் பிரித்தானியர்கள் அதிரடி கைது.. இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in ஆசியா

கீழக்கு ஆசிய நாடான சீனாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பாக அந்நாட்டு பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு பிரித்தானியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனி ஹாங்காங்கில் வெடித்த போராட்டம் காரணமாக பெய்ஜிங்கிற்கும் லண்டனுக்கும் இடையே சமீபத்தில் பதற்றங்கள் வெடித்தன. தற்போது, இந்த கைது நடவடிக்கையின் மூலம் பதற்றம் அதிகாரித்துள்ளது.

கடந்த வாரம் 7 வெளிநாட்டு ஆசிரியர்கள் மற்றும் 9 வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சுஜோ நகரில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட 16 வெளிநாட்டவர்களும் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர் என சோதனையில் தெரிவிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த வகையான போதைப்பொருள் என்பதை பொலிசார் குறிப்பிடவில்லை.

ஜியாங்சு மாகாணத்தில் நான்கு பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சீனா அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், தூதரகம் அவர்களுக்கு உதவி வழங்கி வருகின்றன என பிரித்தானியா தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர், 114 நாடுகளில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான சுவிஸ் நிறுவனமான EF Education First கீழ் இயங்கும் ஒரு ஆங்கில கல்வி மையத்தின் ஆசிரியர்கள் என்று சீனாவின் அரசு வானொலி தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சுவிஸ் நிறுவனம் தற்போது சீனா அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறது.

போதைப்பொருகளை ஒழிப்பு கொள்கையைக் கொண்டுள்ள சுவிஸ் நிறுவனம், வேலை நேரத்திற்கு பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் அதிகபட்சமாக 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. ஒரு நபர் குற்றவியல் காவலில் வைக்கப்பட்டுள்ளார், இது கைது நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...