தந்தையை அடிக்காதீர்கள்... பொலிசாரிடம் மண்டியிட்டு கெஞ்சிய சிறுமி.. உருக வைக்கும் காட்சி

Report Print Basu in ஆசியா

சீனாவில் சிறுமி ஒருவர் தன் தந்தையை பொலிசாரின் தாக்குதலிருந்து காப்பாற்ற மண்டியிட்டு கெஞ்சிய சம்பவம் வீடியோவாக வெளியாகி உருக வைத்துள்ளது.

கங்க்ஜோ பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அப்பா தனது 9 வயது மகளை பள்ளியிலிருந்து அழைந்து வந்துள்ளார். அப்போது, நண்பர் ஒருவர் சாலையில் விபத்துக்குள்ளாகி கிடப்பதை பார்த்துள்ளார். உடனே தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு உதவி செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த பொலிசார், சாலையில் காரை நிறுத்திய தந்தையை எச்சரித்துள்ளனர். பின்னர், அவரின் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். பின்னர், பொலிசாருக்கும், தந்தைக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.

ஒன்றுக்கூடிய பொலிசார் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, உடனிருந்த மகள் நடுவில் பாய்ந்து தந்தையை பாதுகாத்துள்ளார். பின்னர், பொலிசார் முன் மண்டியிட்டு தந்தையை தாக்க வேண்டாம் என கதறியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மக்கள் சண்டையை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்