திருமணத்திற்கு முன்னரான பாலியல் உறவு: மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Report Print Steephen Steephen in ஆசியா

சீனப் பல்கலைக்கழகங்களில் பயிலும் 70 சத வீகிதத்திற்கும் மேற்பட்டமாணவர்கள் திருமணத்திற்கு முன் பாலியல் உறவுவைத்து கொள்வதை ஆதரித்துள்ளதுடன் 56 சதவிகிதமானோர் பாலியல் கல்வி அவசியம்எனக் கூறியுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள கருத்துகணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலக கருத்தடை தினத்தை முன்னிட்டு சீனாவின்தேசிய சுகாதார நிறுவனம், தேசியகுடும்ப கட்டுப்பாட்டு ஆணைக்குழு மற்றும் குடும்ப திட்டசங்கம் என்பன இணைந்து மேற்கொண்டஇந்த கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.

130 பல்கலைக்கழகங்களில்17 ஆயிரத்து 966 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களில்31.8 விகிதத்தினர், திருமணம் திட்டமிடப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியானஉறவை வைத்து கொள்வதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

23.6 விகிதமானோர்,திருமணத்திற்கு முன்னர் எவ்வித பாலியல்உறவுவை வைத்து கொள்ளக் கூடாதுகருத்து தெரிவித்துள்ளனர்.

10.1 விகிதம்கர்ப்பம் தரிப்பது அனுபவம் தொடர்பில் கருத்துகணிப்பு நடத்தப்பட்டதாகவும் போதுமான கருத்தடை சாதனங்கள்இல்லாத காரணத்தினால் அடிக்கடி கர்ப்பம் தரிப்பதாக 3.2 வீதத்தினர் கூறியுள்ளதாகவும் சீன குடும்ப கட்டுப்பாட்டுதிட்ட சங்கத்தின் பிரதித் தலைவர் யோஹேஹிங் கூறியுள்ளார்.

சீன சனத் தொகையில் 300 மில்லியன்பேர் 10க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறுமட்டத்தில் மாணவர்களுக்கு இனப்பெருக்கம் சுகாதர கல்வியை வழங்ககல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments