வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி தானாக அழியும் வசதி : ஆக்டிவேட் செய்வது எப்படி?

Report Print Kavitha in ஆப்ஸ்

முன்னணி குறுஞ்செய்தி செயலியாக விளங்கும் வாட்ஸ் ஆப்பில் அண்மையில் குறுஞ்செய்திகள் தானாக அழியும் வசதி அறிமுகம் செய்யப்பட்டமை தெரிந்ததே.

ஏழு நாட்களின் பின்னர் குறுஞ்செய்திகள் அழியக்கூடியதாக இருக்கும் இவ் வசதியானது 2.20.207.2 வாட்ஸ் ஆப் பதிப்பில் கிடைக்கப்பெறுகின்றது.

இந்நிலையில் குறித்த வசதியினை எவ்வாறு ஆக்டிவேட் மற்றும் டீஆக்டிவேட் செய்வது என்பது தொடர்பில் பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் செயலியை முதலில் திறந்து எந்த நபருடன் பரிமாறப்பட்ட குறுஞ்செய்தி 7 நாட்களில் அழிய வேண்டுமோ அதற்குரிய குறுஞ்செய்தி பரிமாறலை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் Contact Profile Picture இனை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Disappearing messages என்பதை கிளிக் செய்யவும்.

பின்னர் தோன்றும் பக்கத்தில் On அல்லது Off எனும் இரு தெரிவுகள் காணப்படும்.

இங்கு On செய்வதன் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.

அதேபோன்று Off செய்வதன் மூலம் டீஆக்டிவேட் செய்ய முடியும்.

இவ் வசதியினை குழுக்களுக்கிடையிலான சாட்டிங்கிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்