ரிப்போர்ட் செய்யப்படும் பதிவுகள் தொடர்பில் பேஸ்புக்கின் அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
6Shares

நாள்தோறும் அதிகளவான போஸ்ட்கள் பகிரப்படும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.

அதேவேளை இத் தளத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாது பல பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பதிவுகள் தொடர்பில் ரிப்போர்ட் செய்து அவற்றினை நீக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் தந்துள்ளது.

எனினும் இதற்கான படிமுறைகள் காரணமாக சில சமயங்களில் நீண்ட நேரம் எடுக்கின்றது.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் மூலம் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய பதிவுகளை வேகமாக இனங்கண்டு அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கு ஏதுவாக இருக்கும் என பேஸ்புக் எதிர்பார்க்கின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் புரொடக்ட் மனேஜரான Ryan Barnes இத் தொழில்நுட்பமானது சுமார் 15,000 வரையான ரிவ்யூ செய்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்