பேஸ்புக் நிறுவனமானது அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ஒரு வாரத்தில் தானாகவே அழியக்கூடிய வசதியினை அண்மையில் வாட்ஸ் ஆப் செயலியில் தந்திருந்தது.
இதனை அடுத்து தற்போது பேஸ்புக் மெசஞ்சரிலும் குறித்த வசதியை அறிமுகம் செய்கின்றது.
பேஸ்புக் மெசஞ்சரில் Vanish Mode எனும் மறையக்கூடிய நிலையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் தானாக அழிவடையும்.
இவ் வசதியினை தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்கள் பயன்படுத்த முடியும்.
அத்துடன் விரைவில் இவ் வசதியானது இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன பேஸ்புக் நிறுவனத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.