அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
1725Shares

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளமை தெரிந்ததே.

எனினும் இச் சேவை முதலில் இந்தியாவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இப்படியான நிலையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் சொப்பிங் பொத்தான் ஒன்றினை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கின்றது.

இதன் மூலம் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பொத்தான் ஆனது அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவும் பொத்தான் இருக்கும் பகுதியில் தரப்படவுள்ளது.

மேலும் இவ் வசதியினை அன்ரோயிட் மற்றம் iOS சாதனங்கள் இரண்டிலும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்