வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களுடைய இலக்கத்தை Block செய்துள்ளதை அறிவது எப்படி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
137Shares

முன்னணி இணையவழி குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இதில் தொந்தரவு தரும் பயனர்களை ப்ளாக் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.

எனினும் ஒருவர் குறிப்பிட்ட இலக்கங்களை ப்ளாக் செய்யும்போது அவருக்கு எந்தவிதமான தகவலும் அறியத்தரப்படமாட்டாது.

ஆனாலும் சில விடயங்களை வைத்துக்கொண்டு இலக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதை அறிய முடியும்.

  • தடை செய்யப்பட்ட இலக்கத்தினை கொண்டவரால் தடை செய்தவர் இறுதியாக எப்போது வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தியுள்ளார் என்பதனை அறிய முடியாது (Last Online)

  • உங்களுடைய இலக்கத்தை தடை செய்தவரின் Profile Picture இனை பார்க்க முடியாது.

  • குறுஞ்செய்தி அனுப்பும்போது ஒரு சரி அடையாளம் மாத்திரமே காண்பிக்கப்பட்டிருக்கும். இரண்டு சரி அடையாளங்கள் காண்பிக்கப்படாது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்