சமூகவலைத்தளங்கள் வரிசையில் பேஸ்புக்கிற்கு அடுத்ததாக பல மில்லியன் பயனர்களைக் கொண்டு முன்னணியில் திகழ்கின்றது டுவிட்டர்.
இத் தளத்தில் Topics எனப்படும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ் வசதியின் ஊடாக பயனர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறான தகவல்களை தேடிப்பெற முடியும்.
அதாவது விருப்பமான விளையாட்டுக் குழு, நகரம் அல்லது செயற்பாடுகளின் அடிப்படையில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது இவ் வசதியினை இந்தியாவிலும் அறிமுகம் செய்து வைத்துள்ளது டுவிட்டர்.
இங்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்போது குறித்த வசதி கிடைக்கப்பெறுகின்றது.
இந்த தகவலானது இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.