இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் நீடிப்பு: எத்தனை மணித்தியாலங்கள் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
24Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் அப்பிளிக்கேஷன்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது.

இதில் புகைப்படங்கள், சிறிய அளவிலான வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகள் என்பவற்றினை பதிவேற்றம் செய்ய முடியும்.

தவிர நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நேரத்தினை 4 மணித்தியாலங்களாக உயர்த்தியுள்ளது இன்ஸ்டாகிராம்.

எனினும் இக் கால நீடிப்பினை பெறுவதற்கு குறித்த கணக்கானது IP தொடர்பான மற்றும் கொள்கை மீறல் என்பவற்றில் ஈடுபட்டிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அது தவிர நேரடி ஒளிபரப்பானது 30 நாட்களுக்கு சேமிக்கப்பட்டிருக்கும்.

அதன் பின்னர் தானாகவே அழிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்