உலகிலேயே அதிக பயனர்களைக் கொண்ட முதலாவது சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்நிறுவனமானது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் எனும் மற்றுமிரு அப்பிளிக்கேஷன்களை நிர்வகித்து வருகின்றது.
இவற்றில் வாட்ஸ் ஆப்பில் இரு வகை காணப்படுகின்றது.
அதாவது பொதுப் பாவனைக்கான வாட்ஸ் ஆப் மற்றையது வியாபார நோக்கத்திற்கான வாட்ஸ் ஆப் என்பனவாகும்.
வியாபார ரீதியான வாட்ஸ் ஆப் ஊடாக தற்போது இலவசமாகவே பயனர்கள் சேவையைப் பெற்று வருகின்றனர்.
ஆனால் இச் சேவைக்காக விரைவில் பேஸ்புக் கட்டணம் அறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது நிறுவனத்தின் வருமானத்தினை அதிகரிப்பதற்காக பேஸ்புக் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.