பேஸ்புக்கில் வீடியோக்கள் தானாக பிளே ஆவதை நிறுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
177Shares

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் வீடியோக்களும் தரவேற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் அன்றாடம் பல இலட்சக்கணக்கான சுவாரஸ்யமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பேஸ்புக் இணையத்திலும் சரி, மொபைல் அப்பிளிக்கேஷன்களிலும் சரி குறித்த வீடியோக்கள் தானாகவே பிளே ஆகின்றன.

இதனால் கட்டுப்பாடு இன்றி டேட்டாக்களின் அளவு அதிகமாக விரயமாகும்.

இதனை தடுப்பதற்கு Auto Play வசதியினை நிறுத்தி வைக்க முடியும்.

பேஸ்புக்கில் Settings and Privacy எனும் பகுதிக்கு சென்று Settings என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

தோன்றும் பக்கத்தில் Media and Contacts என்பதை தெரிவு செய்து Autoplay என்பதை கிளிக் செய்து பின்னர் Never Autoplay Videos என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இணையத்தளம் எனின் Settings சென்று Videos என்பதை தெரிவு செய்து Auto Plays Video என்பதை Turn Off செய்யவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்