பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை கூகுள் போட்டோஸிற்கு மாற்றுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளில் கூகுள் போட்டோஸ் சேவையும் ஒன்றாகும்.

இச் சேவையில் பயனர்கள் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க முடிவதுடன், நண்பர்கள், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழ முடியும்.

இப்படியிருக்கையில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை நேரடியாக கூகுள் போட்டோஸ் தளத்திற்கு மாற்றக்கூடிய வசதி பேஸ்புக்கில் காணப்படுகின்றது.

இதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதனை பார்க்கலாம்.

முதலில் இணைய உலாவியில் பேஸ்புக் தளத்தினை ஓப்பின் செய்து உங்கள் கணக்கினுள் நுழையவும்.

அடுத்து வலது பக்க மூலையில் உள்ள அம்புக்குறி அல்லது முக்கோண வடிவிலான பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து Facebook Information என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் Transfer a copy of your photos and videos என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது கேட்கப்படும் பேஸ்புக் கணக்கிற்கான கடவுச் சொல்லினை உட்புகுத்தி தொடரவும்.

அடுத்த பக்கத்தில் Choose Destination என்பதில் Google Photos என்பதை தெரிவு செய்யவும்.

அத்துடன் Photos அல்லது Video என்பதை கிளிக் செய்து Next பொத்தானை அழுத்தவும்.

தொடர்ந்து கூகுள் போட்டோஸ் கணக்கினுள் லொக்கின் செய்யவும்.

தொடர்ந்து grant Facebook permission என்பதை Allow தெரிவு செய்யவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்