பேஸ்புக்கில் கொண்டுவரப்படும் அதிரடித் தடை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
50Shares

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இன்று சிறந்த விளம்பர தளமாகவும் விளங்குகின்றது.

இதன் காரணமாக மக்களிடம் எந்தவொரு விடயத்தினையும் இலகுவாக கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது.

இதனைப் பயன்படுத்தி தடுப்பு மருந்து தொடர்பான விளம்பரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைய கொரோனா தொற்று நிலமையை அடிப்படையாக வைத்து இவ்வாறு தடுப்பு மருந்து விளம்பரங்கள் பிரசுரம் செய்யப்படுகின்றன.

இதனால் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டும் வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்ட பேஸ்புக் நிறுவனம் தடுப்பு மருந்துகள் தொடர்பில் மக்களை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை பேஸ்புக்கில் மாதாந்தம் 2.7 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்