வாட்ஸ் ஆப்பில் சர்வதேச தொலைபேசி இலக்கங்களை சேர்த்துக்கொள்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
161Shares

வாடஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியானது உலகெங்கிலும் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செயலியில் உள்நாட்டு நபர்களின் இலக்கங்கள் தவிர வெளிநாட்டு நபர்களின் இலக்கங்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

எனினும் சாதாரண நிலையில் மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள உள்ளநாட்டு இலக்கங்களை தானாகவே வாட்ஸ் ஆப் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் அவ்வாறு சேமிக்கப்பட்ட வெளிநாட்டு இலக்கங்களை எடுத்துக்கொள்ளாது.

கண்டிப்பாக வெளிநாட்டு இலக்கங்களுக்கு முன்னர் நாட்டிற்கான இலக்கத்துடன் (Country Code) + அடையாளம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக லண்டன் தொலைபேசி இலக்கம் ஒன்று கைப்பேசியில் 078XXXXXXX என சேமிக்கப்பட்டிருப்பின் அவ் இலக்கமானது வாட்ஸ் ஆப்பில் காண்பிக்கப்படாது.

எனவே பூச்சியத்தை நீக்கி குறித்த இலக்கத்திற்கு முன் +44 78XXXXXXX என்றவாறு மாற்றியமைத்து சேமிக்க வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்