தற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ கொன்பரன்ஸிங் அப்பிளிக்கேஷனாக Zoom விளங்குகின்றது.
இதில் தரப்பட்டுள்ள வசதிகளும், கட்டணம் இன்றி ஏனைய அப்பிளிக்கேஷன்களை விடவும் அதிகளவானவர்கள் பங்குபற்றக்கூடியதாக காணப்படுகின்றமையுமே இதற்கு காரணமாகும்.
இந்த அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்களுள் ஒன்றாக வீடியோ கொன்பரன்ஸிங்கில் ஈடுபடும் நபர் தனது பின்னணியை (Background) மாற்றியமைக்க முடியும்.
இதனை Virtual Background என அழைக்கின்றனர்.
இவ் வசதியினை செயற்படுத்துவதற்கு Settings பகுதிக்கு சென்று Virtual Background என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
பின்னர் தரப்பட்டுள்ள பின்னணி ஒன்றினை தெரிவு செய்து பயன்படுத்த முடியும் அல்லது விரும்பிய பின்னணி ஒன்றினை அப்லோட் செய்தும் பயன்படுத்த முடியும்.