வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த புதிய அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பயர்ச்செய்கையை அதிகம் பாதிக்கும் உயிரினமாக வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன.

இவற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

MAESTRO என குறித்த அப்பிளிக்கேஷன் பெயரிடப்பட்டுள்ளது.

இது ஸ்மார்ட் கைப்பேசியின் கமெரா, GPS என்பவற்றினைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் அதிகமாகவுள்ள பிரதேங்களை அடையாளம் காண்கின்றது.

இதன்மூலம் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக இலகுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் Lincoln பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்தே இதனை வடிவமைத்துள்ளனர்.

இதேவேளை வருடம்தோறும் வெட்டுக்கிளிகள் சுமார் 18 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலத்தினை நாசம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்