ப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து டிக்டாக்கில் பரவும் கொடூர விளையாட்டு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
178Shares

கடந்த வருடங்களில் ப்ளூவேல் எனும் விளையாட்டு தொடர்பில் உலகமெங்கிலும் பரபரப்பு காணப்பட்டது.

ஒருவரை கொடூரமாக செயற்படும் விதமாக மாற்றியமைக்க கூடியதாக இருந்த அந்த விளையாட்டு தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மற்றுமொரு தலைவலி பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரபல டிக்டாக் செயலியில் பரவும் இந்த விளையாட்டானது ஒருவரது முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பினை முறிக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தாக இருப்பதுடன் தலை தரையில் அடிபட்டு மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

அதாவது மூவர் சேர்ந்து விளையாடும் இவ் விளையாட்டில் ஒருவர் நடுவில் இருக்க ஏனைய இருவர் அவரின் இடது, வலது புறங்களில் நிற்பார்கள்.

நடுவில் இருப்பவரை துள்ளச் செய்து அவரது கால்களை தட்டிவிடுவார்கள்.

இதன்போது அவர் நிலை தடுமாறி பின்புறமாக விழ நேரிடும்.

இவ் விளையாட்டு தற்போது வைரலாக பரவி வருவதுடன், பலரும் முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்