பத்தாயிரம் வரையிலான அப்பிளிக்கேஷன்களை தடைசெய்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இவ்வாறான அப்பிளிக்கேஷன்களில் சில பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துகின்றன.

இப்படியான சுமார் பத்தாயிரம் வரையிலான அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக் நிறுவனம் தற்போது தடைசெய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் 400 வரையான டெவெலொப்பர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

இவற்றுள் ஒவ்வொரு டெவெலொப்பர்களும் சராசரியாக 25 வரையான அப்பிளிக்கேஷன்களை உருவாக்கியுள்ளனர்.

இவை அனைத்தும் பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியே உருவாக்கப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் சில அப்பிளிக்கேஷன்கள் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்