அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா நீங்கள்? உடனடியாக இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் நீக்கவும்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில் உள்ள பல அப்பிளிக்கேஷன்களை நீக்கி வருகின்றது.

குறித்த அப்பிளிக்கேஷன்கள் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதனாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் தற்போது அன்ரோயிட் கைப்பேசிகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய மேலும் சில அப்பிளிக்கேஷன்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதுடன், இதுவரை 4.72 லட்சத்திற்கும் அதிகமானோர் குறித்த அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்து நிறுவியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்களின் பெயர்கள் பின்வருமாறு,

 1. Beach Camera 4.2
 2. Mini Camera 1.0.2
 3. Certain Wallpaper 1.02
 4. Reward Clean 1.1.6
 5. Age Face 1.1.2
 6. Altar Message 1.5
 7. Soby Camera 1.0.1
 8. Declare Message 10.02
 9. Display Camera 1.02
 10. Rapid Face Scanner 10.02
 11. Leaf Face Scanner 1.0.3
 12. Board Picture editing 1.1.2
 13. Cute Camera 1.04
 14. Dazzle Wallpaper 1.0.1
 15. Spark Wallpaper 1.1.11
 16. Climate SMS 3.5
 17. Great VPN 2.0
 18. Humour Camera 1.1.5
 19. Print Plant scan
 20. Advocate Wallpaper 1.1.9
 21. Ruddy SMS Mod
 22. Ignite Clean 7.3
 23. Antivirus Security - Security Scan,App Lock
 24. Collate Face Scanner

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்