புத்தம் புதிய வசதியை சோதனை செய்யும் பேஸ்புக்: பயனர்கள் வரவேற்பார்களா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அசுர வளர்ச்சியை அடைவதற்கு அத்தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Like வசதியும் ஒரு காரணமாகும்.

பயனர்கள் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதிக லைக் வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றமை மென்மேலும் பேஸ்புக் புதிய பயனர்களை தன்வசம் ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த லைக் வசதியினை தேவை ஏற்படின் மறைத்து வைக்கும் வசதியை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

இதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்திற்கான லைக் எண்ணிக்கையை மற்றவர்கள் அறிய முடியாது.

இவ் வசதி தற்போது சோதனை முயற்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆப் ஆராய்ச்சியாளரான Jane Machun Wong என்பவர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்