பேஸ்புக் மொபைல் அப்பிளிக்கேஷனில் கொண்டுவரப்படும் மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மொபைல் சாதனங்களை பயனர்கள் பொதுவாக தமது கண்களுக்கு அண்மையாக வைத்தே பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

இதனை தவிர்ப்பதற்காக Dark Mode எனும் வசதியினை மொபைல் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்துள்ளனர்.

இவ் வசதியானது தற்போது மொபைல் சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பரீட்சார்த்த ரீதியாக அன்ரோயிட் சாதனங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இவ் வசதி விரைவில் ஏனைய சாதனங்களிலும் கிடைக்கப்பெறும்.

பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் இவ் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்