வாட்ஸ் ஆப்பில் கோப்புக்களை அனுப்பவோ அல்லது பெற முடியவில்லையா? இதோ தீர்வுகள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் ஆப் செயலியானது குறுஞ்செய்திகளை பகிருதல் மற்றும் ஆடியோ, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவுதல் மாத்திரமன்றி வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் உட்பட மேலும் பல கோப்புக்களை பரிமாறிக்கொள்ளவும் உதவுகின்றது.

எனினும் சில சமயங்களில் கோப்புக்களை அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ இவ் வசதி செயற்படாது காணப்படும்.

இதனை ஒரு சில வழிகளில் சோதிப்பதன் ஊடாக சரிசெய்துகொள்ள முடியும்.

முதலில் வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இணைய இணைப்பு செயற்படு நிலையில் இருக்கின்றதா என்பதை சோதிக்க வேண்டும்.

அவ்வாறில்லாவிடில் இணைப்பினை ஏற்படுத்த வேண்டும்.

இணைய இணைப்பு சரியாக இருந்தும் செயற்படவில்லை எனின் வேறொரு இணைய இணைப்பிற்கு (Hotspot) மாற்றம் செய்து பார்க்க வேண்டும்.

சில சமயங்களில் வாட்ஸ் ஆப் தரவுகள் சேமிக்கப்படும் சேமிப்பகத்தில் இடவசதி இல்லாவிடினும் கோப்புக்களை பரிமாற முடியாது.

எனவே Settings சென்று Storage என்பதை கிளிக் செய்து சேமிப்பகத்தில் இடவசதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

இடவசதி இல்லை எனின் தேவையில்லாத சில கோப்புக்களை நீக்கி மீண்டும் முயற்சிக்கவும்.

இல்லாவிடில் வாட்ஸ் ஆப் சேமிப்பகத்தினை SD Card இற்கு மாற்றியமைத்த பின்னர் முயற்சிக்கவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்