பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை வாட்ஸ் ஆப்பில் புகுத்த துடிக்கும் அரசு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

அதேபோன்று போலியான தகவல்கள், கலவரங்களை தூண்டக்கூடிய தகவல்கள் என்பனவும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே இதனை தடுப்பதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் மாத்திரமன்றி இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதன் ஊடாக இப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என இந்திய அரசு நம்புகின்றது.

அதாவது Finger Print வசதியை புகுத்துவதன் மூலம் போலி தகவல்கள் பரப்புபவர்களை இலகுவாக இனங்காண முடியும் என எண்ணுகின்றது.

இதன்படி ஒவ்வொரு பயனர்களும் Finger Print பயன்படுத்தியே தமது வாட்ஸ் ஆப்பினுள் உள்நுழைய வேண்டும் அப்போது Finger Print இற்கு உரியவர்களின் தகவல்கள் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருக்கும்.

இப்படியிருக்கையில் போலித் தகவல்கள் பரப்பும் பயனர் பேக் ஐடியில் இருந்தாலும் அவரது ஐடியை கொடுத்து Finger Pirnt மூலம் உண்மையான விபரங்களை திரட்ட முடியும் .

எனினும் இவ் வசதியை பயனர்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்